எடை குறைக்கும் கிரீன் காபி கொட்டை Magic Weight loss with green coffee beans

KMS Shopping – Easy Earnings – Sale at home – Best Reselling Techniques
contact:-
whatsapp no 9344527437
community group link:- https://chat.whatsapp.com/H8Gck2L4gLECn2fpRR7Zs5

offer code – RJE
to order veetoon products
whatsapp no – 8012348070

காபி கொட்டைகளில் வறுக்காத பதப்படுத்தப்பட்ட கொட்டை. எனினும் இதில் காபியின் நறுமண மும் சுவையும், இந்த பச்சை கொட்டைக்குள் அப்படியே இருக்கும். வறுத்த காபி கொட்டையில் வறுக்கும் போது கொட்டையில் இருக்கும் ஆற்றல் இழந்துவிட வாய்ப்புண்டு. ஆனால் பச்சை கொட்டையில் இந்த ஆற்றல் பாதுகாக்கப்படுகிறது.

க்ரீன் காபி பீன்ஸ் கொட்டைகளில் குளோரோஜெனிக் அமிலம் பாதுகாக்கப்படுகிறது. இது உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. அதிக உடல் எடையைக் கட்டுக்குள் வைப்பதோடு இரத்தத்தில் சர்க்கரை அளவை பராமரிக்கவும் உதவுகிறது. இதனால் வறுத்த கொட்டைகளை விட பச்சை காபி கொட்டைகள் அதிக ஆற்றலைத் தரும் என்று நம்பப்படுகிறது. தற்போது க்ரீன் டீ போன்று க்ரீன் காபியும் உடல் எடை குறைப்பில் பயன்படுத்தப்பட்டு உடல் எடையையும் குறைக்க உதவுகிறது.

குளோரோஜெனிக் அமிலம்சிறந்த வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. இது பிஎம் ஆர் என்னும் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிப்பதால் கல்லீரலில் இருந்து உற்பத்தியாகும் க்ளுக் கோஸ் இரத்தத்தில் கலப்பதைக் குறைக்கிறது. அதற்கு மாற்றாக உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பு செல்களில் சேமித்து வைத்திருக்கும் கொழுப்பை எரிக்க உதவுகிறது.

உடலையும் மனதையும் விரைவில் தளரசெய்யாமல் ஃபிட்டாகவும் ஆரோக்கியமாகவும் வைக்க தினம் ஒரு கப் க்ரீன் காபி பருகுவது நல்லது. இதில் இருக்கும் அதிகப்படியான ஆன்டி ஆக்ஸிடெண்ட் கள் ஆயுளை நீட்டித்து ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. உடலில் இருக்கும் அழுக்குகளை நீக்குகிறது குறிப்பாக கல்லீரலில் இருக்கும் டாக்ஸின்களை நீக்கி செரிமானத்தை ஊக்குவிக்கிறது.

காலை ஒரு கப் க்ரீன் காபி, நாள்முழுக்க உடல் சுறுசுறுப்பாக இயங்குவதற்கு தேவையான உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து அதிகளவு ஆற்றலை வழங்குகிறது. மந்தமான சோர்விலிருந்து காப் பாற்றி மூளைக்கு சுறுசுறுப்பை வழங்குகிறது. உண்ணும் உணவை ஆற்றலாக மாற்றும் திறனை அதிகரித்து உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கிறது

உடல் எடை குறைய

உடல் எடை பருமனாக இருப்பவர்களுக்கு மேலும் அதிகமாக பசி உணர்வு உண்டாவதுண்டு அத்த கைய பசி உணர்வை கட்டுப்படுத்த தினம் ஒரு கப் க்ரீன் காபி போதுமானது. இதைப் பயன்படுத்தும் போது நீங்களே உணர்வீர்கள்.

இந்தியன் ஜர்னல் ஆஃப் இன்னோவேட்டிவ் ஆராய்ச்சி ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது. பச்சை காபியில் உள்ள குளோரோஜெனிக் அமிலமானதுஉடலில் மெட்டபாலிசத்தை உயர்த்தி எடை குறைப் பில் வேகமாக செயல்படுவதாக தெரிவித்துள்ளது. உடலில் இருக்கும் கெட்டகொழுப்புகளை கரைத்து வெளியேற்றுகிறது. இதனால் அதிக எடை இழப்பு சாத்தியமாகிறது.